பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

-

நிலைமண்டில ஆசிரியப்பாவின் ஈறு

61. என்னென் கிளிவி ஈறாப் பெறுதலும் அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற

நிற்கவும் பெறூஉ நிலைமண் டிலமே.

-யா.கா. 28 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிலைமண்டில ஆசிரியப்பாவின் ஈறு இவ்வாறு வரும் என்பது கூறிற்று.

(இ - ள்.) நிலைமண்டில ஆசிரியப்பா ‘என்’ என்னும் அசைச்சொல்லை இறுதியாகப் பெற்று வருதலும், ‘என் என்பதில் அமைந்துள்ளவாறு, பிற ஒற்றெழுத்துக்களை ஈறாகப் பெற்று வருதலும் பெறும் என்றவாறு.

கிளவியாவது சொல். கிளவியாக்கம் என்று ஓர் இயல் வகுத்தமைத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். இரட்டைக் கிளவி என்பதன் கண்ணும் கிளவி சொல்லாதல் அறிக.

அந்தம் பெற நிற்றல் என்னாது, ‘நிலைபெற நிற்றல்' என்றார் அடிநிலைமாறாத தன்மையது இவ்வாசிரியம் என்பது உரைத்தற்கு.

அன்னவை என்றது ‘என்' என்பதிலுள்ள னகர ஒற்றுப் போன்ற பிற ஒற்றுக்களை.

பிறவும் என்றது ஒழிந்த அகவற்பாக்களுக்கு வரும் ‘ஏ ஓ முதலியவற்றை.

இவற்றை முப்பகுதியாக உரைத்த தென்னை எனின் நிலை மண்டிலத்திற்கு ‘என்' என முடிதல் சிறப்பு என்பதுவும், பிற வொற்றுக்களால் முடிதலும் கொள்க என்பதுவும், பிறவாறு வரினம் சிறப்பின்றாயினும் கொள்க என்பதும் கூறுதற்குப் பகுத்தோதினார் என்க.

பிறரும்,

“ஒத்த அடியின ஆகியும் ஒற்றிற நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே'

என்றும்,

66

"ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம் என்னென் கிளவியை ஈறாகப் பெறுதலும் அன்ன பிறவுமந் நிலைமண் டிலமே

என்றும் கூறினார்.

சு

-யா. வி. 74 மேற்.

-(அலிநயனார்) யா. வி. 74 மேற்.