பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம்

செய்தானக் கள்வன் மகன்'

-கலித்தொகை. 51.

இது வெண்ட ளையானே ஒரு பொருள் நுதலி வந்த கலி

வெண்பா.

"தீம்பால் கறந்த" என்னும் கலிவெண்பா (கலித்தொகை. 111) இருபத்து நான்கு அடியான் வந்தது. மணிவாசகர் இயற்றிய சிவபுராணம் தொண்ணூற்று ஐந்தடியான் வந்தது.

இடைநாளில் தூது, உலா முதலாய சிறுநூல்கள் கலி வெண்பா யாப்பால் இயற்றப் பெற்றன. அவை ஈரடி ஓரெதுகைத் தாய் நேரிசை வெண்பாப்போல் தனிச்சொல் பெற்று நடந்தன. ஒரெதுகை ஈரடி ‘கண்ணி' என்று அழைக்ப்பெற்றது.

மூவருலாவில், ராசராசசோழனுலா 391 கண்ணிகளால் நடந்தது. வள்ளலார் இயற்றிய விண்ணப்பக் கலிவெண்பா 417 கண்ணிகளாலும், நெஞ்சறிவுறுத்தல் 703 கண்ணிகளாலும் நடையிட்டன.

கலிவெண்பாவை வெண்கலிப்பாவுடன் இணைக்க வேண் டிய தென்னை தனித்துக் கூறாமல் எனின், கலிவெண்பாவுள் பிறதளை மயங்கிவரின் அது கலிவெண்பா அன்று, வெண் T கலிப்பாவேயாம், என்று கோடற்கு இவ்வாறு யாப்புறவு செய் தார் என்க,

66

கலிவெண்பா இவ்வாறு வருமாற்றை, ‘ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் திரிபின்றி நடப்பது கலிவெண் பாட்டே'

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

ஒத்தாழிசைக் கலிப்பா

71. தரவே தாழிசை தனிநிலை சுரிதகம் எனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி.

-தொல். செய். 152.

-யா. வி. 82 மேற். -யா. கா. 30 மேற்.

ந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஒத்தாழிசைக் கலிப் பாவாவது இஃது என்பது கூறிற்று.

-

இ ள்.) தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புக்களை யுடையது யாது அஃது ஒத்தாழிசைக் கலிப்பா என்றவாறு.