பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

217

நான்கு உறுப்பினது என்றார், முறை வைப்பு என்னை, இவற்றின் இலக்கணம் என்னை, எனின் வைத்த முறையே முறை எனக்கொள்க. தரவு தாழிசை முதலியவற்றின் இலக்கணத்தைத் தனித்தனி முன்னே கூறுவார்.

எடுத்துக் கொண்ட பொருளை முதற்கண் தந்து நிற்றலில் தரவு ; எருத்தம் என்பதுவும் அது. எருத்தம் என்பது இவண் தளையைச் சுட்டி நின்றது.

தாழ்ந்து இசைப்பது தாழிசை ; தாழம்பட்ட இசை என் பாரும் உளர். இடைநிலைப் பாட்டு என்பதுவும் அது.

ஒரு சொல்லாய்ப் பொருள் நிரம்பித் தனியே நிற்பது தனி நிலை. இடைநிலை, கூன் என்பனவும் அது.

ஓரிடத்து ஓடும் நீர் குழிக்கண்ணும் திடர்க்கண்ணும் சாரின் சுரிந்தோடுதல் போலச் சுரிந்து செல்வது சுரிதகம் ; சுழி, சுழியம், அடக்கியல், வாரம், வைப்பு என்பனவும் அது.

66

இவை நான்கும் காரணக்குறி, என்னை?

'தந்துமுன் நிற்றலின் தரவே ; தாழிசை

ஒத்ததா ழத்தின தொத்தா ழிசையே'

“தனிதர நிற்றலின் தனிநிலை ; குனிதிரை நீர்ச்சுழி போல நின்றுசுரிந் திறுதலின் சோர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப

என்றார் ஆகலின்.

(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)

“வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் பூணடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ? இது தரவு.

சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால் பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால் நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே?

-யா. வி. 82.

-யா. கா. 30.