பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

‘நிரந்து’, ஒழுங்கு என்னும் பொருட்டது என்பதை மேலே கூறினாம். (கா. பா. 50)

66

"வாணெடுங்கண் பனிகூர” (கா. பா. 71) என்னும் நேரிசை ஒத்தாழிசைக் கலியுள், சூருடைய கருங்கடங்கள்” என்பது முதலாக ஈரடித்தாழிசைகள் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தன.

66

முத்தொடு மணிதயங்கு (கா. பா. 71) என்னும் நேரிசை ஒத்தாழிசைக் கலியுள் “எள்ளனைத்தும் இடரின்றி" என்பது முதலாக மூன்றடித் தாழிசைகள் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தன.

66

ணன்" என்னும்

இமையவில் வாங்கி ஈர்ஞ்சடை அந்தணன்

கலியுள். (38)

(கலித்தாழிசை)

“ஆரிடை என்னாய்நீ அரவஞ்சாய் வந்தக்கால் நீரற்ற புலமேபோற் புல்லென்றாள் வைகறை கார்பெற்ற புலமேபோற் கவின்பெறும் அக்கவின் தீராமற் காப்பதோர் திறனுண்டேல் உரைத்தைக்காண் ; இருளிடை என்னாய்நீ இரவஞ்சாய் வந்தக்கால் பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை அருள்வல்லான் ஆக்கம்போல் அணிபெறும் அவ்வணி தெருளாமற் காப்பதோர் திறனுண்டேல் உரைத்தைக்காண் ; மறந்திருந்தார் என்னாய்நீ மலையிடை வந்தக்கால் அறஞ்சாரான் மூப்பேபோல் அழிதக்காள் வைகறை திறஞ்சேர்ந்தான் ஆக்கம்போல் திருத்தகும் அத்திருப் புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருளுண்டேல் உரைத்தைக்

காண்

99

என நான்கடித்தாழிசையாய் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்தன.

66

தாழிசை அடிச்சிறுமை பெருமையை,

'இரண்டடி சிறுமை; பெருமையதன் இரட்டி ;

-யா. வி. 82.

தரவிற் குறைந்தன தாழிசை யாகும்"

என்பதனாற் கொள்க.