பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

தனிச்சொல் இன்னதென்பது

74. ஆங்கென் கிளவி அடையாத் தொடைபட

நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல்

223

-யா. வி. 82 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் தனிச் சொல்லாவது இன்னது என்பது கூறிற்று.

-

ள்.) ஆங்கு என்னும் சொல் எவ்வுறுப்போடும் அடுக்காமல் தொடுக்கப் பெற்றுத் தனித்து நின்று இசைக்கும் தன்மையதாய்த் தனிச் சொல்லாக வரும் என்றவாறு.

தொடைபடாது வரும் தனிச்சொல் என்பதற்கு ‘அடையாத் தொடைபட' என்றார். ‘நீங்கி இசைக்கும் நிலையது' என்பதால் தனிச் சொல் என்பதை விளக்கினார். இத் தனிச் சொல் ஒரு சொல்லளவாய்ச் சொற்சீரடி, கூன் என்பன போல வருவதன்று, கலிப்பாவின் உறுப்பாக வருவது என்றற்கே தரவு, தாழிசை, தனிச் சொல் என வைத்தார். இதனால், தாழிசைக்கும் சுரிதகத்திற்கும் இடைப்பட்டு நிற்பது இத் தனிச் சொல் ; பிற தனிச் சொல் அத்தன்மைய அல்ல. அவற்றைத் தனியொரு நூற்பாவிற் காட்டினார். ஆண்டுக் கூறுதும் (87).

ஆங்கென் கிளவி' என்றார் எனினும் எனவாங்கு என்று வருவதே பெருவரவிற்று எனக் கொள்க. நூற்றைம்பது கலியுள் தாழிசைக்கும் சுரிதகத்திற்கும் இடையே வரும் தனிச்சொல் பெற்ற கலிகளுள், 61 எனவாங்கு’ என்னும் தனிச்சொல் பெற்றனவாம். ‘ஆங்கு’ ‘ஆங்க’ ‘என்றாங்கே’ ‘ஆங்கதை' என 13 கலிகள் வந்தன. ‘என இவள்', ‘என நின்.' வள்', ‘என நின்.’ ‘என நாம்,’ ‘என நீ' என்று நின்’ ஒவ்வொன்று வந்தன. ‘அதனால்' என ஆறும், 'அவனை' என ஒன்றும் பிறவாறும் வந்தன. ‘அதனால்' என ஆறும், ‘அவனை' என ஒன்றும் பிறவாறும் வந்தன. ஆகலின், ‘என வாங்கு' என்பதே பெருவரவிற்றாதலின் இந் நூலுடையார்க்கும் அஃது உடன்பாடாம் எனக் கொள்க.

ஒத்தாழிசைக் கலிப்பாவுக்குக் காட்டப் பெற்ற எடுத்துக் காட்டுக்களுள் தனிச்சொல், தாழிசைக்கும் சரிதகத்திற்கும் இடையே நிற்குமாறு கண்டு கொள்க.