பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

சுரிதகம் இன்னதென்பது

75. ஆசிரியம் வெண்பா எனஇவை தம்முள் ஒன்றாகி அடிபெற் றிறுதி வருவது

சுழியம் எனப்பெயர் சுரிதகம் ஆகும்.

-யா. வி. 83 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் கலிப்பாவுக்கு ஓதப் பெற்ற உறுப்புக்களுள் இறுதியில் நிற்கும் சுரிதகமாவது இன்ன தென்பது கூறிற்று.

இ-ள்.) ஆசிரியப்பா வெண்பா என்னும் இவ்விரண்டனுள் ஒன்றாகி அப் பாவிற்குரிய அடி அளவு பெற்று இறுதிக் கண்ணே வருவது சுரிதகம் ஆகும். அது சுழியம் என்னும் பெயரும் பெறும் என்றவாறு.

ஆசிரியப்பா ஆகவும் சுரிதகம் வரும்; வெண்பா ஆகவும் சுரிதகம் வரும் என்றார். முன்னது ஆசியச் சுரிதகம், எனவும் அகவற் சுரிதகம் எனவும் பெயர் பெறும். பின்னது வெண்சுரிதகம் என்றும் வெள்ளைச் சுரிதகம் என்றும் பெயர் பெறும்.

இவ்விரண்டும் இணைந்து மருட்பாப் போல் வருமோ என்பார் உளராயின் அவர்க்கு அவ்வாறு வாராது என்பரராய் 'ஒன்றாகி' என்றார்.

சுழியம் எனப்பெறும் சுரிதகத்திற்கு அடியளவு எனைத்து என்பாராயின் அவர்க்கு, 'அடி பெற்று' என்றார் ; அஃது ஆசிரியச் சுரிதக மாயின் மூன்றடிச் சிறுமையும், வெள்ளைச் சுரிதகமாயின் இரண்டடிச் சிறுமையும் ஆம். இனி ஒரு சார் ஆசிரியர் ஈரடி ஆசிரியச் சுரிதகம் கொள்வார் உளராகலின் அதனையும் தழுவிக் கொள்க.

"வாணெடுங்கண் பனிகூர” (கா. பா. 71) என்னும் கலிப்பா மூன்றடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது.

"முத்தொடு மணிதயங்க” (கா. பா. 71) என்னும் கலிப்பா மூன்றடி வெள்ளைச் சுரிதகத்தால் முடிந்தது.

"ஈதலிற் குறை காட்டா" தென்னும் கலிப்பா (37)

“நோய்மலி நெஞ்சமோ டினையல் தோழி

நாமில்லாப் புலம்பாயின் நடுக்கஞ்செய் பொழுதாயின்

காமவேள் விழவாயின் நல்குவள் பெரிதென

ஏமுறு கடுந்திண்டேர் கடவி

நாமமர் காதலர் துணைதந்தார் விரைந்தே”

என ஐந்தடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது.