பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

“கரைசாரக் கரைசார ஒரு காலைக்கு ஒருகால் சுருங்கி வருநீர்த் தரங்கமே போல நாற்சீரடியும், முச்சீரடியும் இரு சீரடியும் ஆகிய அசையடிகளைத் தாழிசைக்கும் தனிச் சொல்லுக்கும் நடுவே கொடுத்து வருமெனின் அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா” என்னும் குணசாகரர் உரை இவண் கொள்ளத்தக்கது (யா. கா. 30).

அம்போதரங்கம் தாழிசைக்குப் பின், ஈரடியால் இரண்டும், அதன்பின் நாற்சீர் அடியால் நான்கும், அதன் பின் முச்சீர் அடியால் எட்டும், அதன்பின் இருசீர் அடியால் பதினாறுமாக வரும். என்னை?

“ஈரடி இரண்டும்; ஓரடி நான்கும்

முச்சீர் எட்டும்; இருசீர் இரட்டியும் அச்சீர் குறையினும் அம்போ தரங்கம்”

என்றார் ஆகலின்.

-யா. வி. 83.

-யா. கா. 30.

ஈரடியாய் இரண்டு வருவதைப் பேரெண் எனவும், அளவடி ஓரடியாய் நான்கு வருவதை அளவெண் எனவும், சிந்தடி ஓரடியாய் எட்டு வருவதை இடையெண் எனவும், குறளடி ஓரடியாய்ப் பதினாறு வருவதைச் சிற்றெண் எனவும் வழங்குவர். (யா. கா) பிறவாறு கூறுவாரும் உளர். (தொல். செய். 145 பேரா.)

'அம்போதரங்கம்' எனினும் ‘அசை அடி’ எனினும் ‘பிரிந் சைக் குறள்' எனினும் ‘சொற்சீர் அடி' எனினும் எனினும் ‘எண் எனினும் ஒக்கும்.

தனிச்சொல் என்பதைக் கூறிற்றிலராயினும் 'தரவினோ டைந்தும்' என்றமையால் எண்ணிக் கொண்டார் ; அதிகாரப் பட்டு நிற்றலான்.

(அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா) “நலங்கிளர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார் இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயல்வரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும் தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே. இது தரவு.