பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே ; அரற்றொடு கழிந்தன்றால் ஆரிருளெம் ஆயிழைக்கே ; நயப்பொடு கழிந்தன்றால் நனவதுவும் நன்னுதற்கே. வை நாற்சீர் ஓரடி அம்போ தரங்கம்.

அத்திறத்தால் அசைந்தன தோள் ; அலரதற்கு மெலிந்தன கண் ;

பொய்த்து ரையால் புலர்ந்தது முகம் ; பொன்னிறத்தால் போர்த்தன முலை ; அழலினால் அசைந்தது நகை ;

அணியினால் ஒசிந்த திடை ;

குழலினால் அவிர்ந்தது முடி ;

குறையினாற் கோடிற்று நிறை.

இவை முச்சீர் ஓரடி எட்டு அம்போ தரங்கம். உட்கொண்ட தகைத்தொருபால் ;

உலகறிந்த அலர்த்தொருபால் ; கட்கொண்டல் துளித்தொருபால் ;

கழிவெய்தும் படித்தொருபால் ;

பரிவுறூஉம் தகைத்தொருபால் ;

படர்வுறூஉம் பசப்பொருபால் ;

இரவுறூஉம் துயரொருபால் ;

இளிவந்த எழிற்றொருபால் ;

மெலிவுவந் தலைத்தொருபால் ;

விளர்ப்புவந் தடைத்தொருபால் ;

பொலிவுசென் றகன்றொருபால் ;

பொறைவந்து கூர்ந்தொருபால் ;

காதலிற் கதிர்ப்பொருபால் ;

கட்படாத் துயரொருபால் ;

ஏதிலார்சென் றணைந்தொருபால் ;

இயல்நாணிற் செறிவொருபால்.

இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போ தரங்கம்.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

233