பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

எருத்தம் இரட்டித் திடைநிலை யாறாய் அடக்கியல் காறும் அமைந்த உறுப்புக் கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும் தரவொடு தாழிசை அம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என்றிவை எல்லாம் முறைதடு மாற மொழிந்தவை அன்றி இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்தும் மற்றும் பிறபிற ஒப்புறுப் பில்லன கொச்சகம் என்னும் குறியின ஆகும்.

237

-யா. வி. 86 மேற். இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் காச்சகக் கலிப்பா இவ்விவ்வாற்றான் வரும் என்பது கூறிற்று.

இ ள்.) தரவு இன்றித் தாழிசை பெற்றும், தாழிசை இன்றித் தரவு பெற்றும், தரவு இரண்டாகித் தாழிசை பெற்றும், ாழிசை இரண்டாகித் தரவு பெற்றும், தாழிசையும் தரவும் இரண்டிரண்டாகியும், தரவு இரண்டாய்த் தாழிசை ஆறாய்ச் சுரிதகம் ஈறாக அமைந்த உறுப்புக்கள் நிற்கும் முறையால் அமைந்தும், தரவு தாழிசை அம்போதரங்கம் வண்ணகம் சுரிதகம் என்னும் இவை நிற்குமுறை தடுமாறியும், கூறிய அவ் வுறுப்புக்களை அன்றி இடைஇடையே சிலவும் பலவும் ஆகிய வெண்பாக்களைப் பெற்றும், பிறபிறவாறு ஒப்பாத உறுப்புக்கள் வந்தும், முறை மயங்கியும் நடந்தன யாவை அவையெல்லாம் கொச்சகக் கலிப்பா என்னும் பெயருடையன ஆகும் என்றவாறு.

இடைநிலை இன்றி எருத்துடையதைத் ‘தரவு கொச்சகம்' என்றும், எருத்தம் இரட்டித்து வருவதைத் 'தரவிணைக் கொச்சகம்” என்றும், இடையது இரட்டித்து எருத்துடைத்தாக வருவதைப் ‘பஃறாழிசைக் கொச்சகம்’ என்றும், முறை தடுமாற அமைந்தனவும் ஒப்புறுப்பு இல்லனவாக அமைந்தனவும் ‘மயங்கிசைக் கொச்சகம்' எனவும் குறியிட்டு வழங்குவார் ஆசிரியர் அமித சாகரனார். அவற்றை யாப்பருங்கலத்துள்ளம் காரிகையுள்ளும் கண்டு கொள்க. அவர் சில தாழிசைகளால் வருவதைச் சிஃறாழிசைக் கொச்சகம்' என்பதுவும் ஆண்டு அறிக.

தரவின்றித் தாழிசை பெறுவதையும், தாழிசை இன்றித் தரவாக வருவதையும் பிறவற்றையும் கொச்சக ஒருபோகு என்பார் ஆசிரியர் தொல்காப்பியனார். என்னை?