பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-புறநானூறு. 239.

256

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

பாணுவப்பப் பசிதீர்த்தனன் ;

மயக்குடைய மொழிவிடுத்தனன்;

ஆங்குச்

செய்பவை எல்லாம் செய்தனன் ஆகலின் இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ

படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் தலையே.

இப் புறப்பாடலும், குறளடி வஞ்சிப்பா.

(சிந்தடி வஞ்சிப்பா)

"கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன பணைஎருத்தின் இணையரிமான் அணையேறித் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியலால் செப்பியோன் புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ

வெருவுறும் நாற்கதி வீடுநனி எளிதே.”

(சிந்தடி வஞ்சிப்பா)

“தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல்

பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி

என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச்

சொன்னலத்தகைப் பொருள்கருத்தினிற் சிறந்தாங்கெனப் பெரிதும்,

கலங்கஞர் எய்தி விடுப்பவும்

சிலம்பிடைச் செலவும் சேணிவந் தன்றே.

இவை சிந்தடி வஞ்சிப்பா.

وو

-திருப்பாமாலை -யா. வி. 90. மேற்.

-யா.வி. 90 மேற்.