பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காக்கை பாடினியம்

'தூங்கல் இசையன வஞ்சி மற்றவை

ஆய்ந்த தனிச் சொல்லோ டகவலின் இறுமே"

257

-யா. வி. 90 மேற்.

என்றார் அமிதசாகரனார். இதனால், கலிப்பாவே போல் வெண் சுரிதகமாகவும். ஆசிரியச் சுரிதகமாகவும் வஞ்சிப்பா இறாது எனவும், ஆசிரியச் சுரிதகம் ஒன்றானே இறும் என்பதும் கொள்க. வஞ்சி விருத்தம்

83. “முச்சீர் நாலடி ஒத்தவை வரினே

1

வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே'

இவ்வுரை மேற்கொள் நூற்பா என்ன கூறிற்றோ எனின் விருத்தம் துறை தாழிசை என்னும் இனம் மூன்றனுள் முதற்கண் நின்ற விருத்தம் ஆமாறு கூறிற்று.

(இ

-

இ ள்.) முச்சீர்களைக் கொண்ட நான்கு அடிகள் அள வான் ஒத்துவரின் வஞ்சி விருத்தம் என்று அதனைக் கொள்ளு தல் வேண்டும் என்றவாறு.

66

(வஞ்சி விருத்தம்)

இருது வேற்றுமை இன்மையால்

சுருதி மேற்றுறக் கத்தினோ

டரிது வேற்றுமை யாகவே

கருது வேற்றடங் கையினாய்”

-சூளாமணி. 742.

(வஞ்சி விருத்தகம்)

66

'அடலே றமரும் கொடியண்ணல்

மடலார் குழலா ளொடுமன்னும்

கடலார் புடைசூழ் தருகாழி

தொடர்வார் அவர்தூ நெறியாரே

-திருஞான. தேவாரம்.

(வஞ்சி விருத்தம்)

“சொல்லல் ஒம்புமின் தோம்நனி ; செல்லல் ஓம்புமின் தீநெறி ;

1. சிறுகாக்கை பாடினியார். யா.வி.92 மேற்.