பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

_

“அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு முடிய நிற்பது கூனென மொழிப”

எனப் பல்காயனாரும்,

66

தானே அடிமுதற் பொருள்பெற வருவது கூனென மொழிப குறியுணர்ந் தோரே

என நற்றத்தனாரும் கூறினார் ஆகலின். (நேரிசை வெண்பா)

"உதுக்காண்,

சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்

பரந்தானாப் பல்புகழ் பாடி-இரந்தார்மாட்

டின்மை அகல்வது போல இருள்நீங்க மின்னும் அளித்தோ மழை

99

இந்நேரிசை வெண்பாவினுள் அடிமுதற்கண் எனத் தனிச்சொல் வந்தது.

66

"அவரே,

(நேரிசை ஆசிரியப்பா)

கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே ;

யானே.

தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப்

பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே ;

அன்னள் அளியள் என்னாது மாமழை

இன்னும் பெய்ய முழங்கி

மின்னும் தோழியென் இன்னுயிர் குறித்தே”

-யா. வி. 94 மேற்.

-யா. வி. 94 மேற்.

-யா. வி. 94 மேற்.

உதுக்காண்'

-குறுத்தொகை 216,

இவ்வாசிரியத்துள் ‘அவரே' என்றும் ‘யானே' என்றும் அடி

முதல் தனிச் சொற்கள் வந்தன.