பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

இத் தரவு கொச்சகக் கலியுள் ‘உலகினுள்' என அடி முதற்கண் தனிச்சொல் வந்தது.

(வெண்கலிப்பா)

“நோக்குங்கால் நோக்கித் தொழூஉம் பிறர்காண்பார் தூக்கிலி தூற்றும் பழியெனக் கைகவித்துப்

போக்குங்காற் போக்கும் நினைத்திருக்கும் மற்றுநாம் காக்கு மிடமன் றினி ;

எல்லா எவன்செய்வாம் ;

பூக்குழாய் செல்லல் அவனுழைக் கூஉய்க்கூஉய் விரும்பியான் வீட்டேனும் போல்வலென் றோண்மேற் கரும்பெழுது தொய்யிற்குச் செல்வலீங் காக

இருந்தாயோ என்றாங் கிற ;

அவனின்,

திருந்தடி மேல்வீழ்ந் திரக்குநோய் தீர்க்கும்

மருந்துநீ ஆகுத லான் ;

இன்னும்

கடம்பூண் டொருகால்நீ வந்தை யுடம்பட்டாள்

என்னாமை என்மெய் தொடு ;

இஃதோ அடங்கக் கேள் ;

நின்னொடு சூழுங்கால் நீயும் நிலங்கிளையா

என்னொடு நிற்றல் எளிதன்றோ மற்றவன்

தன்னொடு நின்று விடு”

-கலித். 63.

வெண்கலியுள் அடிமுதற்கண் தனிச்சொற்கள் பல வந்தன.

“உலகே,

(குறளடி வஞ்சிப்பா)

முற்கொடுத்தார் பிற்கொளவும்

பிற்கொடுத்தார் முற்கொளவும்

உறுதிவழி ஒழுகுமென்ப ; அதனால்,

நற்றிறம் நாடுதல் நன்மை

பற்றிய யாவையும் பரிவறத் துறந்தே”

-யா. வி. 94 மேற்.