பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

(குறளடி வஞ்சிப்பா)

_

“சுற்றும்நீர் சூழ்கிடங்கில்

பொற்றாமரைப் பூம்படப்பைத்

தெண்ணீர்

நல்வயல் ஊரன்கேண்மை

அல்லிருங் கூந்தற் கலரா னாதே”

-யா. வி. 93 மேற்.

-யா. கா. 43 மேற். என்று வந்துள்ளமையால் இதனை வஞ்சிப்பாவின் பாற்படுத்திக் கொள்க. இனி மயேச்சுரர் முதலாகிய ஒருசார் ஆசிரியர் ஞ்சிக்கு இரண்டடிச் சிறுமையும் வேண்டினார் எனக் கொள்க. இவ்வாறே பிறவும் அமைத்துக் கொள்க.

இனி அடிமயக்கம் கூறுமாறு :

அகவற்பாவினுள் வெண்பா அடியும், வஞ்சி அடியும் கலியடியும் மயங்கும்.

கலிப்பாவினுள் வெண்பா அடியும், ஆசிரிய அடியும்

மயங்கும்.

வஞ்சிப்பாவினுள் அகவல் அடியும், கலியடியும் ஒருசார் வெண்பா அடியும் மயங்கும்.

வெண்பாவினுள் பிறபா அடி மயங்கா.

என்னை?

(நேரிசை வெண்பா)

66

ஆசிரியப் பாவின் அயற்பா அடிமயங்கும் ;

ஆசிரியம் வெண்பா கலிக்கணாம் ;ஆசிரியம்

வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் ; வெண்பாவின் ஒண்பா அடிவிரவா உற்று"

என்றார் ஆகலின்.

(நேரிசை ஆசிரியப்பா)

"வழிபடு வோரை வல்லறி தீயே

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக வொறுத்தி

-யா. வி. 31 மேற்.