பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இளங்குமரனார் தமிழ் வளம் - 10

தகுதி கேளினி மிகுதி யாள

நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யோரீண் டுடம்பும் உயிரும் படைத்திசி னோரே வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணி யாளும் இறைவன் தாட்குத வாதே ; அதனால் அடுபோர்ச் செழிய இகழாது வல்லே நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோரிவண் தள்ளா தோரே

இவ்வாசிரியத்துள்,

66

அடுபோர்ச் செழிய இகழாது வல்லே

என இயற்சீரும் வெண்சீரும் விரவிய வெள்ளடி வந்தது.

இதனை,

66

அடுபோர்ச் செழிய ! இகழாது வல்லே நெடுநீர்த் தடுத்து நிலை’

-புறநா. 18.

(இ.கு.)

என்றாக்கி வெண்பாவாதல் அறிக. இவ்வாசிரியத்துள், 'நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சி' என்பது முதலாக வஞ்சியடிகள் வந்தன. இவற்றை,

(குறளடி வஞ்சிப்பா)

66

‘நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்

பூக்கதூஉம் இனவாளை

நுண்ணாரற் பருவராற்

குரூஉக்கெடிற்ற குண்டகழி

வானுட்கும் வடிநீண்மதில்

மல்லல்மூதூர் வயவேந்தே

என்றும்,