பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

ஒருநீ யாகல் வேண்டின்

வருநீர் தடுத்து வளஞ்செயல் கடனே”

என்றாக்கி வஞ்சிப்பாவதல் அறிக.

66

(நேரிசை ஆசிரியப்பா)

ஆனாப் பெருமை அணங்கும் நனியணங்கும் வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது முருகவேள் உறையும் சாரல்

அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே'

இவ்வாசிரியத்துள், 'வானோங்கு சிமையத்து பிரியாது' என்பது கலியடி. இதனை,

“வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது தேனோங்க நறும்பைந்தார்ச் சேயமரும் திருவிற்றே”

என்றாக்கிக் கலியடியாமாறு கண்டு கொள்க. ‘காமர் கடும்புனல்' என்னும் கலிப்பாவினுள் (39)

66

அவனுந்தான்,

(இன்னிசை வெண்பா)

ஏனல் இதணத் தகிற்புகை உண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும்

கானக நாடன் மகள்”

என்பது முதலாக வெண்பா அடி மயங்கி வந்தன. “கொடுவரி தாக்கி” என்னும் கலிப்பாவினுள் (49) “நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை

என்பது முதலாக ஆசிரிய அடி மயங்கி வந்தன.

279

(இ.கு.)

-யா. வி. 29 மேற். மனமகிழ்ந்து

-யா. வி. 20 மேற்.

பட்டினப்பாலை என்பது, வஞ்சி நெடும் பாட்டு. அதனுள், 'நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்' என்பது முதலாக ஆசிரிய அடி மயங்கி வந்தன.

வயலாமைப்

புழுக்குண்டும் வறளடும்பின் மலர்

மலைந்தும்' எனக் கலியடி மயங்கி வந்தது. இதனை,