பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

“வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும்” கயல்நாட்டக் கடைசியர்தம் காதலர்தோள் கலந்தனரே'

99

-யா. வி. 39 மேற்.

என்றாக்கிக் கலியடியாமாறு கண்டு கொள்க. அதனுள்

'கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை'

என்பது வெள்ளடி. இதனை,

“கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை ஆழிசூழ் வையக் கணி”

என்றாக்கி வெள்ளடியாமாறு கண்டு கொள்க.

-யா. வி. 31 மேற்.

இனி, 'நடைவகையுள்ளே' என்ற விதப்பினால் எல்லாப் பாக்களுக்கும் பொதுவாகிய பொருள்கோள், விகாரம், குறிப் பிசை, வகையுளி, வனப்பு, வண்ணம் முதலியனவும் கொள்க. என்னை?

“நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியும் அறுவகைப் பட்ட சொல்லின் விகாரமும் எழுத்தல் இசையை அசைபெறுத் தியற்றலும் வழுக்கா மரபின் வகையுளி சேர்த்தலும் அம்மை முதலிய ஆயிரு நான்மையும் வண்ணமும் பிறவும் மரபுளி வழாமைத் திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே”

என்றார் ஆகலின்.

3. பொருள்கோள்

-யா. வி. 95.

பொருள்கோள் என்பது செய்யுள் பொருள் கொள்ளக் கிடக்கும் முறை என்பதாம். அதனை நான்கென ஆசிரியர் தொல்காப்பியனாரும், எட்டெனப் பின்னூலாரும் கூறுவர் ; ஒன்பதென எண்ணுவாரும் உளர். என்னை?

“நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற் றவைநான் கென்ப மொழிபுணர் இயல்பே

என்றும்,

-தொல். சொல். 404.