பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

283

இதனுள், 'கண்ண்’ என்று தொடங்கியதற்கு எற்ப எயிறு, சுணங்கு, மருங்குல் என்ற முறையால் வைக்காமல் முல்லை, பொன், மின் என்பனவற்றை முறை மாற்றி வைத்தமையால் மயக்க நிரல் நிறை ஆயிற்று.

2. சுண்ணமொழி மாற்று

ஓரடிக்கண் நின்ற சொற்களை ஏற்ற பெற்றியில் மாற்றி யமைத்துப் பொருள் கொள்வது சுண்ணமொழி மாற்றாகும். (நேரிசை வெண்பா)

“கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை சுரையாழ அம்மி மிதப்ப-வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை

இதனுள் மஞ்ஞை என்பது கரையாட என்பதனோடும், கெண்டை என்பது கயத்தாட என்பதனோடும் சுரை என்பது மிதப்ப என்பதனோடும், அம்மி என்பது ஆழ என்பதனோடும், யானை என்பது நிலை என்பதனோடும், முயற்கு என்பது நீத்து என்பத னோடும் இணைந்து பொருள் கொண்டமை அறிக. இவை அவ்வவ்வடிக் கண்ணே மாறிநின்று பொருள் தந்தமையும்

கருதுக.

3. அடிமறி மொழிமாற்று

கடை யாகச்

வேண்டிய எவ்வடியை முதல் டை சொன்னாலும் பொருள் பொருந்தி நிற்பது அடிமறி மொழி மாற்றுப் பொருள் கோள் ஆகும்.

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)

“மாறாக் காதலர் மலைமறந் தனரே ;

ஆறாக் கட்பனி வரலா னாவே ;

ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே ; கூறாய் தோழியான் வாழு மாறே”

-யா. வி. 73, 95 மேற்.

-நேமி. 92 மேற்.

இவ்வாசிரியத்தின்கண் எவ்வவடியை முதல் இடை கடையாகக் கொண்டு கூறினும் ஓசையும் பொருளும் குற்றப்படாமை கண்டு கொள்க.