பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

287

இனி இவற்றுடன் முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்னும் மூன்றையும் கூட்டி ஒன்பதாகக் கூறுவாரும் உளர். இம் மூன்றும் தொகுத்தலுள் அடங்கும் என்பதும் ஒன்று.

6

(நேரிசை வெண்பா)

“சிறுக்கட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு

குறுக்கை இரும்புலி பொரூஉ நாட

நனிநா ணுடைமைய மன்ற

பனிப்பயந் தனநீ நயந்தோள் கண்ணே”

-ஐங்குறு 266.

தனுள் ‘சிறுகண்' என்பது சிறுக்கண் என விரித்தும், ‘குறுங்கை’ என்பது குறுக்கை என வலித்தும் வந்தன.

66

“ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த

குன்றிய லுகரத் திறுதி யாகும்"

-தொல். கிளவி. 8.

இதனுள் குற்றியலுகரம் என்பது குன்றிய லுகரம் என மெலித்து வந்தது.

"ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே.

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து

திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே’”

இதனுள் 'சிறிய இலை' என்பது சிறியிலை எனத் தொகுத்தும் ளையுமே ஊழ்க்குமே வீழ்க்குமே சொரியுமே சாரியுமே என்பன வி ளையும்மே ஊழ்க்கும்மே, வீழ்க்கும்மே, சொரியும்மே என விரிந்தும் வந்தன.

(கலிவிருத்தம்)

“மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே”

தனுள் நிழல் என்பது நீழல் என நீண்டு வந்தது.

-தேவாரம் 5.90:1.