பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

(அறுசீர்க் கழிநெடிலடி

ஆசிரியவிருத்தம்)

“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

வாக்கினிலே ஒளியுண் டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவு மாயின்,

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருட ரெல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார் ;

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

என்றும்,

இங்கமரர் சிறப்புக் கண்டார்”

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

“தாயெழிற் றமிழை என்றன்

தமிழரின் கவிதை தன்னை

ஆயிரம் மொழியிற் காண

இப்புவி அவாவிற் றென்ற

தோயுறும் மதுவின் ஆறு

தொடர்ந்தென்றன் செவியில் வந்து

பாயுநாள் எந்த நாளோ

ஆரிதைப் பகர்வார் இங்கே”

என்றும்,

66

(எண்சீர்க்கழிநெடிலடி

ஆசிரியவிருத்தம்)

சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறும்

தேக்கியநல் வாய்க்காலும் வகைப்ப டுத்தி

நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்

நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?

கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்

கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?

293

-பாரதியார்.

-பாவேந்தர்.