பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காக்கை பாடினியம்

“அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்

என்றார் ஆகலின்.

“மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்’

66

“கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்

இவை அளபெடை மிக்கு வந்தன.

297

-தொல் செய். 217.

-அகம். 99.

-மலைபடு 352.

7. நெடுஞ்சீர்வண்ணம்: நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடுஞ்சீர் வண்ணம். என்னை?

“நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்”

என்றார் ஆகலின்.

(குறள் வெண்பா)

-தொல். செய் 218.

66

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு”

து நெட்டெழுத்து மிக்கு வந்தது.

-திருக். 397.

8. குறுஞ்சீர் வண்ணம்: குற்றெழுத்து மிகுந்து வருவது

குறுஞ்சீர் வண்ணம். என்னை?

66

"குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்”

என்றார் ஆகலின்.

66

“குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி"

இது குற்றெழுத்து மிக்கு வந்தது.

-தொல். செய். 219.

-அகம் 7.

9. சித்திரவண்ணம் : நெடிலும் குறிலும் ஒப்ப விரவி வருவது சித்திரவண்ணம். என்னை?

“சித்திர வண்ணம்,

நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே"

என்றார் ஆகலின்.

-தொல். செய். 220.