பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

39

இந்நூற்பா என்ன கூறிற்றோவெனின், சீரும் தளையும் சிதைய நிற்குங்கால் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒற்றெழுத்தின் தன்மையவாய் நின்று அலகுபெறா என்பது கூறிற்று.

(இ - ள்.) இகரம் உகரம் என்னும் இரண்டு குறுக்கங்களும் செய்யுளில் சீரும் தளையும் சிதைய நிற்கும் காலைாயில் அலகு பெறாத ஒற்றெழுத்துப் போலவே நிற்கும் தன்மையுடையன வாகும் என்றவாறு.

‘தளை தப நிற்புழி ஒற்றாம் நிலையின’ எனவே, தளை தபா டங்களில் குற்றெழுத்தளவாய் அலகுபெறும் எனக் கொள்க.

குற்றியலுகரத்தின் வழியாகப் பிறப்பது குற்றியலிகரம் எனினும், அடங்கன் முறையின் முன்மை கருதி இகரத்தை முன் வைத்தார் ; அசைக்கு உறுப்புகள் எண்ணிய இடத்தும் (நூற்பா. 1) இவ்வாறே கூறியமை அறிக.

(குறள் வெண்பா)

“குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்

-திருக். 66.

இக்குறள் வெண்பாவினுள் ‘குழலினி தியாழினி' என்பதிலுள்ள குற்றியலிகரத்தை விலக்கி அலகிடாக்கால் நிரையொன்றாசிரியத் தளையாய் வெண்பா யாப்புப் பிழைபடுவதையும், குற்றிய லிகரத்தை விலக்கி அலகிடுங்கால் இயற்சீர் வெண்டளையாய் வெண்பா யாப்புப் பிழைபடாமையையும் காண்க.

(குறள் வெண்பா)

‘வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.’

திருக். 291.

இக்குறள் வெண்பாவினுள் ‘எனப்படுவ தியாதெனின்' என்பதிலுள்ள குற்றியலிகரத்தை விலக்கி அலகிடாக்கால் கலித்தளையாய் வெண்பா யாப்புப் பிழைபடுவதையும், குற்றியலிகரத்தை விலக்கி அலகிடுங்கால் வெண்சீர் வெண்டளையாய் வெண்பா யாப்புப் பிழை படாமையையும் காண்க.

து இகரத்திற்குக் கூறியது ; உகரத்திற்கு வருமாறு ;