பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

2. அசை

அசைகளின் பெயரும் தொகையும்

தனியசை என்றா இணையசை என்றா

இரண்டென மொழிமனார் இயல்புணர்ந் தோரே.

-யா. வி. 5 மேற்.

இந்நூற்பா என்ன கூறிற்றோவெனின் அசைகளின் பெயரும் தொகையும் கூறிற்று.

-

இ ள்.) யாப்பியல் உணர்ந்த புலவர், அசைகள் தனியசை என்றும், இணையசை என்றும் இரண்டாம் என்று கூறுவர் என்றவாறு.

தனியசை எனினும் நேரசை எனினும் ஒக்கும்.

இணையசை எனினும் நிரையசை எனினும் ஒக்கும்.

நேரசை, நிரையசை என வழங்காது தனியசை, இணையசை என்று கூறவேண்டிய தென்னை? எனின், ஒருசார் ஆசிரியர்குறி அஃதெனவும், அக்குறி தக்கதெனல் தங்கருத்தெனவும் அறிவித்தற்கு என்க. இனி, நேரசை நிரையசை என்னின் அவற்றின் இலக்கணமும் வகுத்துரைக்க வேண்டுமன்றே; அவ்வாறு உரைக்காமல் பெயர் கூறுமாற்றானே அவற்றின் இலக்கணமும் பெற வைத்தற்கு இவ்வாறு கூறினார், தொகுத்துக் கூறுதல் இவர்க்கியல்பு ஆகலான்

என்க. என்னை?

(நேரிசை வெண்பா)

“தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்பகுத்துப் பன்னினார்-நல்யாப்புக்

கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார்

சொற்றார்தம் நூலுள் தொகுத்து

-யா. வி. 1 மேற்.

என்றார் ஆகலின்.

தனியெழுத்தசை என்க. அஃதாவது

என்னோ இலக்கணம்? லக்கணம்? என்னின், தனியசை என்பது அஃதாவது குறிலும், நெடிலும்,