பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

குறிலொடு நெடில் இணையுமே அன்றி நெடிலொடு நெடிலோ, நெடிலொடு குறிலோ இணையசை யாகா என்க. ஆயின்

யின் இ வை எவ்வாறு அலகூட்டப் பெறுமோ எனின்

நெடிலொடு நெடிலும், நெடிலொடு குறிலும் தனிக்கப் பெற்றுத் தனியசை என்றே கொள்ளப்பெறும்.

முன்னே இணையசை இலக்கணம் கூறியது (5) உடன் பாட்டுவிதி. அவை வ என இவண்

ணையசை ஆகாதவை

கூறியது எதிர்மறை விதி. இவ்வாறே மேல் வருவனவும் கொள்க.

66

(குறள் வெண்பா)

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.”

-திருக். 370.

க்குறள் வெண்பாவில் ‘ஆரா’ என்றும், ‘பேரா’ என்றும் வரும் நெடிலிணைகளை இணையசையென அலகிடின் அசைச்

சீராகித் தளைசீர் பிழைபடுதல் காண்க.

(குறள் வெண்பா)

66

'ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை ம நீடுவாழ் கென்பாக் கறிந்து.”

-திருக். 1312.

க்குறள் வெண்பாவில் வரும் 'ஊடி' என்னுஞ் சீரை நெடில் குறில் இணைந்த இணையசையென அலகிடின் அசைச் சீராக அமைந்து தளைசீர் பிழைபடுதல் காண்க.

இது, விதி எனக் கூறிய அளவே அமையுமே, அஃதல்லாதது விதியன்று எனக் கொள்வரே, இது வேண்டாத கூறுதல் எனின், நுண்ணுணர்வினார்க்கு அஃதொக்கும் ; ஏனையோர்க்கும் தெளிவாதல் கருதி வெளிப்பட மறுத்துரைத்து விளக்கினார், 'மயங்க வைத்தல்' நூற்குற்றம் ஆகலானும், 'விளங்க வைத்தல்' நூல் அழகு ஆகலானும் என்க. இவ்வாறு இவர்க்கு வழி நூல் செய்தார் காட்டாமையால்,

66

"குறிலிணை குறில்நெடில் தனித்துமொற் றடுத்தும்

நெறிமையின் நான்காய் வருநிரை யசையே’’

என்னும் நூற்பாவின்கண் (8) 'நெறிமையின்' என்ற விதப்பினால் நெடில் இரண்டு இணைந்தும், நெடில் குறில் இணைந்தும் நிரையசை ஆகா. என்னை?