பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காக்கை பாடினியம்

மூவசைச் சீர்உரிச் சீர்; இரு நான்கினுள், நேரிறு நான்கும் வெள்ளை; அல்லன

பாவினுள் வஞ்சியின் பாற்பட் டனவே”

என்றார் அமிதசாகரனார்.

இயற்சீரும் உரிச்சீரும் வரும் இடங்கள்

11. இயற்சீர் உரிச்சீர் எனவிரு சீரும்

மயக்க முறைமையின் நால்வகைப் பாவும் இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்.

59

-யா. வி. 12.

-யா. வி. 15 மேற்.

இந்நூற்பா என்ன கூறிற்றோ எனின் இயற்சீரும் உரிச்சீரும் வரும் பாக்கள் இவை எனவும், இனங்கள் இவை எனவும் கூறிற்று. (இ) ள்) இயற்சீர் உரிச்சீர் என்னும் இருவகைச் சீர்களும் நால்வகைப் பாக்களிலும், மூவகை இனங்களிலும், மயங்கி வரும் என்றவாறு.

-

மயக்க முறையாவது மயங்கி வருமுறை ; மயக்கம் எனினும் கலத்தல் எனினும் விரவல் எனினும் ஒக்கும். மயக்க முறைமை சுட்டியதால் தனித்து வருதலும் கொள்க. இயற்சீரே வருதலும் உரிச்சீரே வருதலும் இருவகைச் சீர்களும் கலந்து வருதலும் என மூவகையும் கொள்க.

நால்வகைப் பாக்கள் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன. இனி மருட்பா என்பதும் உண்டன்றே; அதனைக் குறிக்காமை என்னை; அதனுள் வாராதோ? எனின் வரும்; மருட்பா என்பது வெண்பா முன்னாக அகவல் பின்னாக வரும் இயல்பிற்றாகலின் வெண்பாவும் அகவற்பாவும் கூறவே அவ்விரண்டன் கூட்டமாகிய மருட்பாவுக்கும் அஃது ஒக்கும் எனக் கூறார் ஆயினார் என்க.

இனத்தின் மூன்று தாழிசை, துறை, விருத்தம் என்பன. இவற்றை நால்வகைப் பாக்களுடன் உறழப் பன்னீரினமாம். ஆக, எல்லாப் பாக்களிலும் இனங்களிலும் இவை வரப்பெறும் என்றார் என்க. இது பொது விதி. என்னை எனின், மேலே ‘இவை இன்ன விடத்து வாரா' எனச் சில சீர்களை விலக்கி உரைப்பார் ஆகலின்.

மயக்க முறையில் வருதலே பெருவரவிற்று என்று கூறு வாராய் ‘இனிதின் இயலும்' என்றார். 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' என்பது விதியாகலின். இவ்வாறே,