பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறும் பேறு

vii

கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா?

வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது.

பொருள் மட்டுமா வளம்?

புலமை வளமில்லையா?

ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை வளமில்லையா?

-

எல்லாம் வளமே! “மல்லல் வளனே" என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; "வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்?

“வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம்”

66

99

என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம்” என்பது (25:33-34)

“நாடென்ப நாடா வளத்தன

""

என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ,

நானில வளங்களையும் நாடா நாடில்லை!

எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை?

எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை?

பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்?

நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா?