பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

வஞ்சித் தளைகள்

_

20. “தன்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முளொத் தொன்றினும் ஒன்றா தொழியினும் வஞ்சியின் பந்தம் எனப்பெயர் பகரப் படுமே’

-யா. வி. 21. மேற்.

-யா. கா. 10 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்தமுறையான் வஞ்சித்தளைகளாமாறு கூறிற்று.

(இ - ள்.) இணையசை இறுதியாகிய உரிச்சீர் இரண்டு தம்முள் ஒத்து வரினும் ஒவ்வாது வரினும் வஞ்சித்தளை என்று பெயரிட்டு அழைக்கப் பெறும் என்றவாறு.

தம்முள் ஒத்து ஒன்றுதல் என்பது நிரையீற்று உரிச்சீர், நிரைமுதல் உரிச்சீருடன் ஒன்றி நிற்றல். தம்முள் ஒன்றாது ஒழிதல் என்பது நிரையீற்று உரிச்சீர் நேர் முதல் உரிச்சீருடன் ஒன்றாது நிற்றல். அஃதாவது கனிச்சீர் முன் நிரை வருதலும், கனிமுன் நேர் வருதலும் ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையுமாம் என்க. ஒன்றுதல், ஒன்றாமை உடைமையாலும், வஞ்சிப்பாவிற்கு உரிமை பூண்டு வருதலானும் இத்தளைப் பெயர்கள் காரணக் குறிகளாம்.

பிற பாக்களிலும் இனங்களிலும் அருகியே வரப்பெறும் நாலசைச்சீர் இதன்கண் பயின்று வருதலும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வருதலும், இச்சீர்கள் கண்ணுற்று நிற்றலும் ஆகியவை கருதி ஒன்றியும் ஒன்றாதும் என்னாது “ஒன்றாது ஒழியினும்' என்றார் என்க. பந்தம் - தளை. வஞ்சியின் பந்தம் என்றாலே அமையுமாக, ‘பந்தம் எனப் பெயர் பகரப் படுமே' என விரிக்க வேண்டியதென்னை எனின் நாலசைப் பொதுச்சீர், ஓரசைப் பொதுச்சீர் ஆகியவற்றைப் பிற சீர்களோடு ஒப்பிட்டு நோக்கித் தளைவிரித்துக் கொள்ளுமாறு என்க.

அவற்றுக்குத் தளை கொள்ளுமாறு :

நேர் இறுதியாகிய நாலசைப் பொதுச்சீரை வெண்பா உரிச் சீர் போலாகக் கொண்டு வரும்சீர் முதலசையோடு ஒன்றியது வெண்சீர் வெண்டளையாகவும், ஒன்றாதது கலித்தளையாகவும் கொள்க.

நிரை இறுதியாகிய நாலசைப் பொதுச்சீரை வஞ்சியுரிச் சீரே போலாகக் கொண்டு வரும்சீர் முதலசையோடு ஒன்றியதை ஒன்றிய வஞ்சித் தளையாகவும், ஒன்றாததை ஒன்றாத வஞ்சித் தளையாகவும் கொள்க.