பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

20. மடற்றிறங் கூறல் என்பது தோழி தழை மறுப்பதற்கு ஆற்றானாகிய தலைமகன் சொல்லுதல். அதற்குச் செய்யுள்

வருமாறு :

(249) "காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் றென்புலியூ ரீசன சாந்து மெருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப் பாய்சின மாவென வேறுவர் சீறூர்ப் பனைமடலே'

(250) “படலே றியமதில் மூன்றுடைப்

பஞ்சவன் பாழிவென்ற

அடலே றயில்மன்னன் தெம்முனை போல்மெலிந் தாடவர்கள்

கடலே றியகழி காமம்

பெருகிக் கரும்பனையின்

மடலே றுவர்மற்றுஞ் செய்யா

தனவில்லை மாநிலத்தே”

(251) “மாவென மடலும் 'ஊர்ப் பூவெனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப

பிறிது மாகுப காமங் காழ்க் கொளினே

99

திருக்கோவையார் 74

பாண்டிக்கோவை 92.

(252) “கொண்டதோர் காதற் குணமுடியாக் கொள்கைத்தேற் குண்டுநீர் வேலைக் குவலயத்தோர்-வண்டின் கணங்காட்டுங் கூந்தலாய் கையகத்துக் கொள்ளார் மணங்காட்டுங் காந்தள் மலர்”

(253) “மங்கையர்தங் கண்ணால் மயங்கினார் வெள்ளெலும்புந் துங்க வெருக்குந் தொடுத்தணிந்-தங்கமெலாம் வெந்தேறு சாம்பல் மிகவணிந்து வீதிதொறும் வந்தேறி யூர்வர் மடல்

குறுந்தொகை 17.

அகத்திணை.

- கிளவித் தெளிவு.

1.

மு. ப : ஊருப். 2. காழ் கொளினே.