பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம்

மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே”

(257) “பலமன்னு 'புள்ளினம் பார்ப்புஞ் சினையும் அவையழிய

உலமன்னு தோளண்ணல் ஊரக் கொளாய்கொல் ஒலிதிரைசூழ் நிலமன்னன் நேரியன் மாறன் நெடுங்களத் தட்டதிங்கட் குலமன்னன் கன்னிக் குலைவளர் பெண்ணைக் கொழுமடவே”

(258) "வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே அவையினும் பலவே சிறுகருங் காக்கை அவையினும் அவையினும் பலவே குவிமடல் ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே

(259) “கொள்ளலி ரம்ம வருளினி ராதலிற் புள்ளின் பெருங்கிளை யலற

வள்ளிதின் விரிந்த மாப்பனை மடலே’

11

திருக்கோவையார் 77.

பாண்டிக்கோவை 96.

_1(?)

பொருளியல் 43.

23. எழுதரிது என்றல் என்பது தலைவியின் உருவத்தைக் கிழியில் எழுதுதல் அரிது எனத் தோழி தலைவனிடம் கூறுதல்.

அதற்குச் செய்யுள் வருமாறு:

(260) “யாழும் எழுதி எழின்முத்

தெழுதி இருளின்மென்பூச் சூழும் எழுதியொர் தொண்டையுந் தீட்டியென் தொல்பிறவி

ஏழும் எழுதா வகைசிதைத்

தோன்புலி யூரிளமாம்

1. புள்ளீனும்; இறையனார் அகப்பொருள் 9. மேற்.