பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே”

(261) “விற்றான் எழுதிப் புருவக்

6

கொடியென்றிர் தாமரையின் முற்றா முகைநீர் எழுதி

முலையென்றிர் மொய்யமருட் செற்றார் படச்செந் நிலத்தைவென்

றான்தென்னன் கூடலன்னாள் சொற்றான் எனக்கிள்ளை யோநீர் எழுதத் துணிகின்றதே”

(262) "எளிதோ அம்ம ஒளியிழை மடந்தை கிளிபுரை கிளவியு நடையும்

இளமென் சாயலும் எழுதுமா றுமக்கே”

89

- திருக்கோவையார் 79.

பாண்டிக்கோவை 99.

பொருளியல் 44.

24. சேட்படைக்கு அழிதல் என்பது தலைவன் கருதியதை மறுத்துத் தோழி அயலே விலக்குதற்கு வருந்துதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(263) “குன்றக் குறவன் காதல் மடமகள்

வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி வளையள் முளைவாள் எயிற்றள் இளையள் ஆயினும் ஆரணங் கினளே”

(264) “நயனின் மையிற் பயனிது என்னாது

பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்கிது தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது உரைமதி உடையுமென் உள்ளஞ் சாரல் கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்

பச்சூன் பெய்த பகழி போலச்

சேயரி பரந்த ஆயிழை மழைக்கண்

உறாஅ நோக்க முற்றவென்

பைதல் நெஞ்ச முய்யு மாறே

ஐங்குறுநூறு 256.

- நற்றிணை 75.