பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

103

(319) “அளிநீ டளகத்தி னட்டிய தாது மணியணியு

மொளிநீர் சுரிகுழற் சூழ்ந்தவொண்

மாலையுந் தண்ணறவுண் களிநீ யெனச்செய் தவன்கடற்

றில்லையன் னாய்கலங்கல்

தெளிநீ யனையபொன் 'னேபன்னு கோலந் திருநுதலே"

(320) கொடியார் நுணுகிடை தான்புனை கோல மெனக்குலவும்

படிநான் புனைந்தனன் பாவாய் வருந்தல் பறந்தலைவாய் வடிவா ரிலங்கையில் மன்னரை

வென்ற வழுதிசெம்பொன்

அடிநாண் மலரிணை சூடா

மடந்தையர் போலயர்ந்தே

(321) “பேதுறல் வாழிநின் காதற் றோழி

கைபுனை ‘கோலமென மெய்பெற் றென்றே ஐயம் யாவதும் இன்றிப்

பெய்பூங் கோதை பெருங்கவின் கொளவே’”

திருக்கோவையார் 122.

பாண்டிக்கோவை 73.

பொருளியல் 54.

38. உண்மகிழ்ந் துரைத்தல் என்பது இவ்வகை கோலஞ் செய்தற்கு ஆற்றளாகிய தலைமகளை ஆற்றுவித்துத் தலைவன் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(322) “செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்

பலவன் திருக்கழலே

கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி

வாய்க்கொள்ளும் கள்ளகத்த

கழுநீர் மலரிவள் யானதன்

கண்மரு விப்பிரியாக்

1. னேமன்னு. 2. கோல.