பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

127

வார்த்துன் னமுதுந் திருவு

மதியு மிழந்தவநீ

பேர்த்து மிரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே”

(407) “அறம்புரி செங்கோல் அரிகே சரிதிருத் தாளடையார்

பறந்தலை வாய்ப்பட வென்றவன் கூடற் பதியனையா

ணிறந்தவ வாட நிறமுந்

திருவு முடனழிந்து

கறங்குவ தென்று மொழியாய்

கழியார் கருங்கடலே”

(408) “புன்னை நனைப்பினும் பூஞ்சினை தோயினும் பின்னிருங் கூந்தலெந் தோழி நடையொக்கு மன்ன நனையாதி வாழி கடலோதம்”

(409) “புன்னை மலர்தூய்ப் புனத்துப் பலிக்கிடந்த வன்னந் துயிலழித்தார் ஆர்கொலோ-மன்னன் மதுரா கனதொண்டி மாக்கடலே சொல்லாய் முதிரா முலைபயந்த மூன்று”

திருக்கோவையார் 173.

பாண்டிக்கோவை 143.

-பழம்பாட்டு.

பழம்பாட்டு.

63. இரவுக்குறி கழிதல் என்பது அல்ல குறிப்பட்டு மீண்ட தலைமகன் வருந்துதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(410) “மாற்றே னெனவந்த காலனை

யோல மிடவடர்த்த

கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்

கொடுங்குன்றி னீள்குடுமி

மேற்றேன் விரும்பு முடவனைப் போல மெலியுநெஞ்சே

யாற்றே னரிய வரிவைக்கு

நீவைத்த வன்பினுக்கே”

திருக்கோவையார் 159.