பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

129

என்னு 'மொழிமாற்றுச் சூத்திரத்துள் இவையெல்லாங் கண்டு கொள்க.

இரவுக்குறி முற்றும்.

ஈ. வரைதல் வேட்கை

64. கழிபடர்கிளவி என்பது இவ்வகை வந்து ஒழுகாநின்ற

தலைமகனைக்

காணும் பொழுதிற்

காணாப் பொழுது பெரிதாகலின் ஆற்றாளாய தலைமகள் சொல்லுதல். அதற்குச்

செய்யுள் வருமாறு :

(417) “மாதுற்ற மேனி வரையுற்ற

வில்லிதில் லைநகர்சூழ்

போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள் ஏதுற் றழுதியென் னீர்மன்னு மீர்ந்துறை வற்கிவளோர் தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை செப்புமினே”

(418) “தாதலர் நீண்முடித் தார்மன்னன் மாறன்றண் ணங்குமரிப்

போதலர் கானற் புணர்குறி

வாய்த்தாள் புலம்பிநைய

2 ஏதிலர் நோய்செய்வ தோநின் பெருமை யெனநெருங்கிக் காதலர் தம்மைக் கழறியென் னூனங் கருங்கடலே”

திருக்கோவையார் 174.

பாண்டிக்கோவை 237.

1. மொழிமாற்று விளக்கம்:

'இரவினும் பகலினும் என்றார் ஆயினும் மொழிமாற்றிப் பகலின் கண்ணும் இரவின் கண்ணும் எனக் கொள்க. என்னை? பகற்குறி நிகழ்ந்த பின்னை இரவுக்குறி நிகழற் பாலதாகலான். அவ்வொழுக்கம் நிகழ்ந்த முறையான் நோக்கி மொழிமாற்றுச் சூத்திரமாகப் பொருளுரைக்கப்படும்.” இறையனார் அகப்பொருள் 18 உரை.

2.

ஏதலர்.