பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

தளருந் தடவரைத் தண்சிலம்

பாதன தங்கமெங்கும் விளரும் விழுமெழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின் றொளிருஞ் சடைமுடி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே'

(460) “ஐய வாழியோ வைவாய் ஏனப்

புன்றலை மடப்பிடி புலியென வெரூஉம் பொன்மருள் வேங்கை யெம்மூர் போல ஆடவர்ப் பிரிந்தோர்க் கலைக்கும்

வாடையு முளதோநின் பெருங்கன் னாட்டே'

(461) “உள்ளத் தவலம் பெருக வொளிவேலோய் எள்ளத் துணிந்த விருண்மாலை-வெள்ளத்துத் தண்டா ரகலம் தழூஉப்புணையா நீநல்கி னுண்டாமென் றோழிக் குயிர்"

(462) "பந்தி இளமிளகு பாராதே தின்றிளைய மந்தி தளரு மலைநாட - முந்தருவி சோர வரிநெடுகண் சுற்றும் பனிவாடை யீர மெலிவாள் இவள்

141

- திருக்கோவையார் 193

சிற்றெட்டகம்.

- வெண்பாமாலை 328.

கிளவித்தெளிவு.

73. வரைவது கிளத்தல் என்பது இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்குத் தலைமகளுந் தோழியு மாற்றாத் தன்மையராய் வரைவு பயக்கச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (463) “பற்றொன்றில் லார்பற்றுந் தில்லைப்

பரன்பரங் குன்றினின்ற

புற்றொன் றரவன் புதல்வன் எனநீ புகுந்துநின்றால்

மற்றுன்று மாமல ரிட்டுன்னை

வாழ்த்திவந் தித்தலன்றி

மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல

ளோமங்கை வாழ்வகையே’

- திருக்கோவையார் 178.