பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(505) “கந்தார் களிறு கடாய்ச்செந்

நிலத்தைக் 'கறுத்தெதிராய் வந்தார் அவியவை வேல்கொண்ட 2கோன்கொல்லி வார்துறைவாய்ப் பந்தார் விரலிதன் பாவைக்கு

வேண்டப்பைம் போதொருவர் தந்தார் தரவவை கொண்டணிந் தாளித் தடங்கண்ணியே’

-பாண்டிக்கோவை 146.

(506) “உள்ளஞ்செய் பாவைக்குன் கைப்போ தருளென்னக் கொள்ளென் றொருவன் கொடுத்ததற்பின்-கள்ளுண்டு வண்டினந்தாழ் கின்ற மலர்க்குவளைப் போதிரண்டு கொண்டணிந்தாள் நீபயந்த கொம்பு”

-பழம் பாட்டு.

2. புனல்தரு புணர்ச்சி என்பது நின்மகன் சுனையாடப் புகுந்த விடத்து அழுந்ததுபடக் கண்டு ஒரு தோன்றல் கரை யேற்றினான் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (507) “ஓங்கிய வெண்குடைப் பைங்கழற்

செங்கோல் உசிதன்வைகை

வீங்கிய தண்புன லாடி

விளையாட் டயர்பொழுதிற்

றேங்கிய தெண்டிரை வாங்க

வொழுகிநின் சேயிழையாள்

நீங்கிய போதருள் செய்தனன் வந்தோர் நெடுந்தகையே”

(508) “காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்

பாண்டிக்கோவை 152.

தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான் நீணாக 'நறும்பபைந்தார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் 4போதந்தா னகனகலம்

1. கறுத்தெரிர்ந்து 2. கோன்கன்னி. 3. நறுந்தண்டார். 4. போத்தந்தான்.