பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

163

றன்னணங் கன்மை யறிந்தும் வெறியின்கட் டாழ்ந்தமையால்

மன்னணங் காயினு மாகவிச்

செவ்வேள் மடவியனே”

(532) “கடவுட் கற்சுனை 'யடையிழந் தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதிர யொண்பூ வுருகெழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பச் சூர்மகள் அருவி இன்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட 2வெறியிடை வந்தோய் கடவு ளாயினு மாக

மடவை மன்ற வாழிய முருகே

(533) “பேதை வாழிய முருகே யாவது மேதில னென்பதை யுணர்ந்து

வாராநோய் தணிய வருத லானே'

-பாண்டிக்கோவை 157.

-நற்றிணை 34.

3பொருளியல் (?)

12. செவிலி அறத்தொடு நிற்றல் என்பது தோழி அறத்தொடு நிற்றல் கேட்ட செவிலி நற்றாய்க்குக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(534) "இளையாள் இவளையென் சொல்லிப்

பரவுது மீரெயிறு

முளையா வளவின் முதுக்குறைந்

தாண்முடி சாய்த்திமையோர்

வளையா வழுத்தா திவருருச்

சிற்றம் பலத்துமன்னன்

றிளையா வருமரு விக்கயி

லைப்பயில் செல்வியையே'

-திருக்கோவையார் 294.

1. யடையிறந். 2. வெறிமனை. 3. இப்பாடல் பொருளியற் பதிப்பில் இடம்பெற்றிலது.