பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

169

(556) "முன்னாள் யானை நம்மை முனிவழித்த

அன்னார் தமக்கோ பிறர்க்கோ

இந்நா ணங்கடை யிரங்கிய முரசே'

-பழம்பாட்டு.

19. முரசு வினாதல் என்பது இவ்வகை சொல்லக்கேட்ட தோழி தந்தை முதலாயினார் கேட்கச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(557) “அந்தணர்க் காகி யகத்தியன்

றானுரை செய்தமும்மைச்

செந்தமிழ்க் காவலன் றென்னம்

பொருப்பிற் செழும்பொழில்சூழ்

பைந்தடத் தாழ்கயந் தாழ்வது கண்டிப் பணிமொழியை வந்தெடுத் தார்க்கன்றி யாவருக் காமிம் மணமுரசே

(558) "செருமலை தானவர் முப்புரந்

தீயெழத் தேவர்கட்கும்

வருமலை தீர்த்தவன் மாமழ

பாடியில் வந்தெதிர்ந்த

கருமலை வீட்டிய செம்மலை

யன்றிக் கறங்குவதிம்

மருமலை கூந்தலை யார்கொள்ள

வேண்டி மணமுரசே”

(559) “தேனை யனைய மொழியாள்மேற் சென்றெதிர்ந்த யானைகடிந் தார்க்கோ வவர்க்கன்றி-யேனையரா வின்றிங்கு நின்றவர்க்கோ யாவர்க்கோ வென்றி முன்றின்கண் ஆர்க்கு முரசு”

இவையெல்லாம்,

1. இப்பாடல்கள் பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம் பெற்றில.

-1பாண்டிக்கோவை ?

-மழவை யெழுபது.

-பழம்பாட்டு.