பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(560) “வெளிப்படை தானே விரிக்குங் காலைத் தந்தை தாயே தன்னைய ரென்றாங் கன்னவ ரறியப் பண்பா கும்மே”

என்னுமிலக்கணத்துட் கண்டுகொள்க.

-இறையனார் அகப்பொருள் 26.

வெளிப்படைநிலை முடிந்தது

2. வரைபொருட் கேகல் கிளவித்தொகை (3)

௫0. விளம்பு மியல்பைப் பழித்தல்

இயற்பட வேவிளம்பல்

உளங்கொள் தணப்பிடர் தன்னை

யொழித்த லெனவுரைக்கும்

வளங்கொள் கிளவிகள் மூன்றும்

வரைபொருட் கேகலெனக்

குளங்கொண்ட நன்மொழிக் கொம்பே

தமிழினுட் கோப்புற்றதே.

(46-49)

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், வரைபொருட் ககறல் மூன்று வகைப்பட்ட கிளவியாம் என்ப தறிவித்தலைக் கருதிற்று. என்னை? இயற்பழித்தல், இயற்படமொழிதல், தணப்பிடரொழித்தல் என. அவற்றுள்,

'இயற்பழித்லென்பது

இவ்வகை வெளிப்பட்ட

பின்றையும் வரையாது நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த விடத்து ஆற்றாளாய தலைமகளைக் கண்ட தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(561) “பொன்னு மணியும் பவழமும் போன்று பொலிந்திலங்கி

மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா தவரினுண்ணோ யின்னு மறிகில வாலென்னை

பாவ மிருங்கழிவாய்

மன்னும் பகலே மகிழ்ந்திரை

தேரும்வண் டானங்களே

99

-திருக்கோவையார் 189.