பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

171

(562) "இகலே புரிந்தெதிர் நின்றதெவ் வேந்தர் இருஞ்சிறைவான் புகலே புரியவென் றான்கன்னி

66

யன்னாள் புலம்புறுநோய் மிகலே புரிகின் றதுகண்டு

மின்றிவ் வியன்கழிவாய்ப் பகலே புரிந்திரை தேர்கின்ற நாணாப் பறவைகளே”

(563) “வானது நாணக் கொடையால்

உலகை வளர்த்தருளும்

சோனகர் வாழும் செழும்பொழில்

'சூழ்ந்தது பாரனையாள்

தானணி வாணுதல் கண்டும்

பகலே தனித்தனியே

மானமி லாதிரை தேரும்

பறவைக டாமகிழ்ந்தே”

-பாண்டிக்கோவை 233.

-பல்சந்தமாலை.

2. இயற்பட மொழிதல் என்பது இவ்வகை சொல்லி யியற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(564) "மின்றா னனைய விளங்கொளி

வேலொடு வெண்டிரைமேல்

நின்றான் நிலமன்ன னேரியன் மாற னிகள்முனைபோற் கொன்றா றலைக்குஞ் சுரமவர் நீங்கவென் கோல்வளைகள்

சென்றா லதுபிறி தாகவிவ் 4வூரவர் சிந்திப்பரே'

-பாண்டிக்கோவை 232.

1.

மு.ப : சூழ்ந்து. 2. மு.ப : டாம(ழக)ழிந்தே. 3. மன்பர்.

4. மு.ப : ஊர்வரச்.