பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம்

தாண்டொல்லை கண்டிடக் கூடுக

நும்மைஎம் மைப்பிடித்தின் றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன் சிற்றம் பலம்நிலவு

சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே”

(574) "பண்டான் அனையசொல் லாய்பைய ஏகு பறந்தலைவாய்

விண்டார் படச்செற்ற கோன்வையை

சூழ்வியன் நாட்டகம்போல்

வண்டார் பொழிலும் மணியறல்

யாறும் மருங்கணைந்து

கண்டார் மகிழும் தகைமைய

தியாஞ்செல்லும் கானகமே

(575) 2“அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வம் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின்

னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி

நிழல்காண் டோறு நெடிய வைகி

மணல்காண் டோறும் வண்டல் தைஇ

வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே

மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்

11

-திருக்கோவையார் 214.

-'பாண்டிக்கோவை 340)

1. இப்பாடல் இறையனார் அகப்பொருளில் விதலையாப்புக்கு மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது. அதிலுள்ள பாடம் வருமாறு:

“பண்தான் அனையசொல் லாய்பரி விட்டுப் பறந்தலைவாய்

விண்டார் படச்செற்ற கோன்கொல்லிப் பாங்கர் விரைமணந்த

வண்டார் கொடிநின் நுடங்கிடை போல வணங்குவன

கண்டாற் கடக்கிற்ப ரோகட வாரன்பர் கானகமே

99

2.

அழிவில.