பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் 11

(604) "சூன்முதிர் கொண்மூ மின்னுபு பொழியக்

கானங் கடுமை நீங்குக

மானுண் கண்ணி போகிய சுரனே

-பொருளியல் 121.

10. செஞ்சுடர்ப் பரவல் என்பது தலைவியை நினைந்து

வருந்திய நற்றாய் நின் கதிர்களான்

கதிர்களான்

வாட்டாது தாமரை மலர்போல மலர்த்து வாயாக எனச் செங்கதிரை இரந்து கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(605) “பெற்றே னொடுங்கிள்ளைவாட

முதுக்குறை பெற்றிமிக்கு

நற்றேன் மொழியழற் கான்நடந்

தாள்முகம் நானணுகப் பெற்றேன் பிறவி பெறாமற்செய்

தோன்றில்லைத் தேன்பிறங்கு

மற்றேன் மலரின் மலர்த்திரந் தேன்சுடர் வானவனே

-திருக்கோவையார் 232.

11. கருமகட் குரைத்தல் என்பது செஞ்சுடர்ப் பரவிய நற்றாய் இளம்பருவம் நீங்காத் தலைவியை நினைந்து வருந்தியுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(606) “வைம்மலர் வாட்படை யூரற்குச்

செய்யுங்குற் றேவல்மற்றென்

மைம்மலர் வாட்கண்ணி வல்லன்கொல்

லாந்தில்லை யான்மலைவாய் மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்

றெண்ணித்துண் ணென்றொளித்துக்

கைம்மல ராற்கண் புதைத்துப் பதைக்குமெங் கார்மயிலே”

(607) “பல்லூழ் நினைப்பினு நல்லென் றூழ

மீளி முன்பிற் காளை காப்ப முடியகம் புகாஅக் கூந்தலள் கடுவனு மறியாக் காடிறந் தோளே"

-திருக்கோவையார் 233.

-ஐங்குறுநூறு 374.