பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(618) “பாலொத்த சிற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க்

கோலத் தவிசின் மிதிக்கிற்

பதைத்தடி கொப்புள்கொள்ளும் வேலொத்த வெம்பரற் கானத்தின் இன்றோர் விடலைபின்போங் காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே

16. சுரத்திறம் வினாதல்

-திருக்கோவையார் 237, 238.

என்பது சுரத்தின்கண்

வருவாரிடம் வினாவுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(619) “சுத்திய பொக்கணத் தென்பணி

கட்டங்கஞ் சூழ்சடைவெண்

பொத்திய கோலத்தி னீர்புலி

யூரம் பலவர்க்குற்ற பத்தியர் போலப் பணைத்திறு

மாந்த பயோதரத்தோர் பித்திதற் பின்வர முன்வரு மோவொர் பெருந்தகையே

(620) “நிழலார் குடையொடு தண்ணீர்க்

கரகம் நெறிப்படக்கொண்

டழலார் அருஞ்சுரத் தூடு

வருகின்ற அந்தணீர்காள் கழலான் ஒருவன்பின் செங்கோற்

கலிமத னன்பகைபோற் குழலாள் ஒருத்திசென் றாளோ

உரைமின்இக் குன்றிடத்தே”

-திருக்கோவையார் 242.

-பாண்டிக்கோவை 216.

17. ஐயம் உரைத்தல் என்பது சுரத்திடைச் செல்லுந் தலைமகனையும் தலைமளையும் கண்டு எதிர் வருகின்றார் 'யார்கொல் இவ்வாறு போந்தார்' என ஐயுற்றுரைத்தது. அதற்குச் செய்யுள் வருமாறு: