பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

189

(621) "வில்லான் விறலடி மேலன

பொற்கழல் வெண்முத்தன்ன பல்லாள் இணையடி மேலன

பாடகம் பஞ்சவற்கு நெல்லார் கழனி நெடுங்களத்

தன்று நிகர்மலைந்த

புல்லா தவரென யார்கொல் அருஞ்சுரம் போந்தவரே”

(622) “வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி 'மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே”

2

18. சேர்விட முரைத்தல்

-பாண்டிக்கோவை 215.

-குறுந்தொகை 7.

என்பது கண்டோரிடை

வினாவிய செவிலிக்குத் தலைவன் தலைவியர் போய்ச் சேர்ந்த இடத்தை அவர் உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(623) “மீள்வது செல்வதன் றன்னையிவ்

வெங்கடத் தக்கடமாக்

கீள்வது செய்த கிழவோ

னொடுங்கிளர் கெண்டையன்ன

நீள்வது செய்தகண் ணாளிந்

நெடுஞ்சுரம் நீந்தியெம்மை

ஆள்வது செய்தவன் தில்லையி னெல்லை யணுகுவரே”

(624) “ஆளையுஞ் சீறுங் களிற்றரி

கேசரி தெவ்வரைப்போல்

காளையுங் காரிகை யுங்கடஞ்

சென்றின்று காண்பர்வெங்கேழ்

-திருக்கோவையார் 247.

1. மேலன. 2. பழுவம்.