பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

11 இளங்குமரனார் தமிழ்வளம்

அந்தாதி நூல் கோயில் அந்தாதி ஆகும். இது கட்டளைக் கலித் துறையான் அமைந்ததாகலாம் என்பது கிடைத்துள்ள நான்கு செய்யுள்களாலும் புலப்படுகின்றது. களவியற் காரிகை உரையாசிரியர் திருக்கோவையார் பாடல்களை அடுத்துக் கோயிலந்தாதிப் பாடல்களை நான்கு இடங்களிலும் அடைவு செய்துள்ளார்.

தலைவியின் கண்ணை, வாலியின் மார்பையும் மரா மரத்தையும் துளைத்த இராமன் அம்புக்கு ஒப்பாக ஒரு பாடல் (136) கூறுகின்றது. இராமன் இலங்கையை அழித்த செய்தியை ஒரு பாடல் (526) கூறுகின்றது.

10. சிற்றெட்டகம்

இப் பெயருடையதொரு நூல் களவியற் காரிகையிற் குறிக்கப் பெறுகின்றது. இதன் பாடல்கள் எட்டனைக் காட்டிச் சிற்றெட்டகம் என்றே அது என்றே அது குறிக்கின்றது. குறிக்கின்றது. இறையனார் அகப்பொருள் உரை, இளம் பூரணர் உரை, நச்சினார்க்கினியர் உரை, யாப்பருங்கலக் காரிகை உரை, யாப்பருங்கல விருத்தியுரை, நம்பியகப் பொருள் உரை, தமிழ் நெறி விளக்கவுரை ஆகியவற்றிலும் இந் நூற் பாடல்கள் மேற்கோளாக ஆளப்பெற்றுள்ளன. ஆங்கெல்லாம் சிற்றட்டகம் என்றே குறிக்கப் பெறுகின்றது. சிற்றடக்கம் என்றும் பாடவேறுபாடு உண்டு. நூற் பெயரையும் பிறவற்றையும் மேலும் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டிய தாகவே உள. களவியற் காரிகை முதற் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் உரைக்கும் இந் நூற் செய்திகள், மேலும் ஆராய்வார்க்குத் துணையாம் எனக் கருதிப் பொறிக்கப் பெறுகின்றது.

“இவ்வரிய உரையுள் மேற்கோளாக வந்துள்ள நூல்களுள் ஒன்று இதுகாறும் மயக்கத்திற்கு ஏதுவாய்க் கிடந்த நூற் பெயரொன்றினைத் தெளிய உணர்த்துகின்றது. 'சிற்றெட்டகம்’ என்ற நூலின் பெயரைச் சிற்றடக்கம் எனவும் பலவாறாகக் கொண்டு தமிழறிஞர் எழுதி வருகின்றனர். உதாரணமாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் வெளியிட்டுள்ள நம்பியகப் பொருள் விளக்கவுரையில் (அகத்திணையியல், சூத்திரம் 6) 'பத்துப் பாட்டும் கலித்தொகையும் ஐங்குறுநூறும் கீழ்க் கணக்கும் சிற்றட்டகமும் முதலாகிய சான்றோர் செய்யுள் களெல்லாம் வேண்டிய முறையானே வைத்தலானும்' எனக் காணப்படுகின்றது. இதனடிக்குறிப்பில் 'சிற்றடக்கம்' என்று பிரதிபேதமாகக் காட்டப்பட்டுள்ளது. களவியற் காரிகை