பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும் “கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை”

என்பது கம்பன் வாக்கு.

83

காவல் இல்லாமலே அனைத்திடங்களும் இருந்தனவோ எனின், “அருங்கடிப் பெருங்காப்பு'ச் செய்யப்பெற்றதையும், ஆறலை கள்வர் அலைக்’ கழிவையும், “கட்போர் உளரெனின் கடுப்பத் தலையேற்றும்" பூதக்கதையையும் இலக்கிய வழியே வெளிப்படக் காணலால், காவல் இருந்தமை தெளிவாம். ஆனால், அவை அரண்மனை சார் காவலும். வணிக நிலைசார் காவலுமாம்! உழவர் பணிபுரியும் ஏர்க்களக் காவல் இல்லையாம். அண்மைக் காலம் வரை நாட்டுப்புறச் சிற்றூர்களில் களத்துப் போர் காவாது வைகியமை கண்கூடு. உழவரிடையே தோன்றாத பண்பாடு வேறு எங்கே அமையும்? ஆகலின் உழவர் களத்தை உரைத்து நாட்டு நாகரிகத்தை நவின்றார்.

வீடுகளுக்குக் கதவு இருந்தாலும் அக் கதவுகளை அடைத்துக் காவல் செய்யவேண்டிய கடமை உழவர்க்கு இருந்தது இல்லை; அவர்கள் கதவு, "அடையா நெடுங்கதவு" என்று பாராட்டப் பெற்றது.

கலைவாழ்வுடைய மகளிர் காட்டு வழிச்செல்லுங்கால், தென்றற் காற்றால் அவர் கூந்தலில் வைத்த பூவும், கூந்தலும் அசைந்து அல்லலுற்றதை அன்றி வேறு அல்லல் அவர் அடைந்தது இல்லை எனக் காட்டு நாட்டவர் நாகரிகம் பேணிய தன்மை இலக்கிய வாழ்வுடைய தாயிற்று.

"சோறாக்குங்கால் உண்டாகும் வெப்பமும், ஞாயிறு ஒளி விடுங்கால் வரும் வெதுப்பமும் அன்றி வேறு வெப்பம் அறியார்; திருவில்லை அன்றிக் கொலைவில்லை அறியார்; கலப்பையை அன்றிப் படைக் கருவியை அறியார்; நின் நாட்டில் வாழ்வோர்” என்று பாராட்டும் நயத்தக்க நாகரிகம் காணப்பெற்றது. இந் நிலை இந் நாட்டிலே வருமேயோ என உணர்வுடையாரை ஏங்கச் செய்தல் ஒருதலை! அவ் வார்வத்தை வாழ்த்துகிறார் ஆசிரியர். அதனால், “போரெலாம் காவாது வைகுக” என்றார். இவ்வாறே அரிசில் கிழாரும் தகடூர் பொருது வீழ்ந்த எழினியைக் கையறு நிலைபாடுங்கால்,

66

“கன்றமர் ஆயம் கானத் தல்கவும்,

வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் களமலி குப்பை காப்பில வைகவும்