பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம்

விலங்குபவை கடிந்த கலங்காச் செங்கோல் வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள் பொய்யா எழினி”

என்றார்.

12

- புறம். 230

இத்தகைய உளநலம் போற்றும் நாட்டிலேயும் ஒருதுயர் உண்டு என்பதைக் காட்டுகிறார் மேலே.

கதிர் அடித்தல், கடாவிடல், பொலிதூற்றல், போர் அடித்தல், அளத்ததல், வண்டியில் ஏற்றிக் கொணர்தல் முதலாய களப் பணிகளால் களம் பேராரவாரம் உடையதாக இருக்கு மன்றே! அவ் வாரவாரத்தால் களத்துப்போரின் மேலும், கழனியிலும், களஞ்சார் தோப்புகளிலும், இருந்த நாரை தன் பெட்டையுடன் அஞ்சிச் செல்லும் ! இதனைப்,

“போரின், உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு, நாரை இரியும்”

என்றார்.

நாரை போரின்கண் வைகுதலை, “பொய்கை நாரை போர்விற் சேக்கும்'

என்றும்,

66

‘கயலார் நாரை போர்விற் சேக்கும்

என்றும் வருவனவற்றால் அறிக.

புறம். 209.

- புறம் 24; ஐங். 9.

இரிதல் - அகன்று செல்லுதல். யாணர்த்தாக - புது வருவாய் உடையதாக. "பெருவிறல் யாணர்த்தாகி” என்பது புறப்பாட்டு (42)

அகன்றலை நாடு சிறக்க; நாறுக; பெய்க; பயில்க; ஈன; நிறைக; வைகுக; யாணர்த்தாக என இயைத்துக் கொள்க.

இவ்வாறு வாழ்த்துதலை,

“நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க’”

“விளைக வயலே வருக இரவலர்"

“பால்பல ஊறுக பகடுபல சிறக்க”

"பசிஇல் லாகுக பிணிசேண் நீங்குக"

(1)

(2)

(3)

(5)