பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

"மாவும் மாக்களும் ஐயறி வினவே”

என்பதும் அவர் வாக்கேயாம்.

93

மரபு. 32.

ஐயறிவுடைய ஆக்கள் அயனாட்டு அளவாக் காட்டில் சென்றும் தம்மைத் தெளிவாகக் கண்டு கொண்டதை வியப் பாராய்,

66

“எப்பிறப் பாயினும் மருவின் மாலையோ இனிதே

என்றார். மருவுஇன்

-

தாடர்புடையாரை அளவளாவும் இன்பம். மாலை தொடர்ச்சி. மருவுதல் - தழுவுதல்; அளவளாவுதல். ஆகோள் மள்ளர் - வெட்சியார். அவரே அவர்தம் காட்டில் சென்று மீளமுடியாக் காடு என்றமையால் காட்டின் கடத்தற்கு அருமை கூறினார்.

-

புறத்து இறுத்தல் புறத்தே தங்குதல். இது 'புறத்திறை’ என்னும் புறத்துறைப் பாற்படும். வெட்சியார் கரந்தையார் ஆகிய இருதிறத்தார்க்கும் ‘புறத்திறைத்’ துறை ஒக்கும். இது,

“நோக்கருங் குறும்பின் நூழையும் வாயிலும் போக்கற வளைஇப் புறத்திறுத் தன்று”

என்பது.

- பு.வெ. 6.

கறவை கன்றை எண்ணிக் கசிந்து உருகுதலை, “கன்றமர் கறவை மான” என்பதனாலும் (புறம். 275), “தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும் ஆபோல்" என்பதனாலும் (கலி. 81.) “ஈற்றா விருப்பிற் போற்றுபு நோக்கி” என்பதனாலும் (பொருந 151). "கற்றாவின் மனம்போலக் கசிந்துருக' என்பதனாலும் (திருவா. திருப்புலம்பல் 3) அறிக. குரல் கேட்டு ஆ செவியெடுத்து நிற்றல், “கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே" என்பதனால் அறிக (பெரி. திருமொழி.

6:8)

மேற்கோள்:

இத் தகடூர் யாத்திரைப் பாட்டை வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை என்பதற்கு இதனை எடுத்துக்காட்டி இது மறவர் கூற்று என்பார் நச் (புறத். 3) ஆங்கு ‘அளவா' என்பது ‘அருள்வர’ எனவும், செவியேற்றன' என்பது ‘செவியோர்த்தன எனவும் பாடவேறுபாடு கொண்டுள்ளன.

(கஉ)