பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் 12

“எவ்வை எம்வயின் வருதல் வேண்டுதும்" "எவ்வைக் கெவன்பெரிதளிக்கும் என்ப" என்பவற்றை (ஐங்குறு. 88, 89)

அறிக.

66

தாள்தந்தது உண்ணலின் ஊங்கு

இனியது இல் ஆகலானும், "பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும் கருணைச் சோறார்வர் கயவர்" ஆகலானும் பிறர் கையை எதிர்பார்த்து வாழ்தல் இழிவு என உட்கொண்டு சூளுரைத்தான் ஆகலின், “கைபார்த் திருப்பன்”

என்றான்.

தன் தங்கையை வாழ்க்கைப் படுத்திய இல்லத்திற்குத் தான் உற்றுழி உதவுதல் தன் கடனாக இருக்கவும் அதனை விடுத்து, அவள் கையையும், அவளைக் கொண்டான் முதலியவர் கைகளையும் எதிர்பார்த்து வாழ்தலை இரத்தலினும் இழி வெனக் கருதினான் ஆகலின் “எவ்வை கடிபட்ட இல்லகத்து என்றான். கடிபடுதல் திருமணம் கொள்ளுதல். கடி - மணமும், காவலுமாம்.

பொழுதுபோகாமைச் செய்வோன் என்பானாய் "விடி வளவில் சென்று விரைந்து” என்றான். "கங்குல் கனைசுடர் கால்சீயாமுன்” கோவலன் கூடற்கு எழுந்தது போல்வது என்க. இனி, ஒற்றாய்ந் துரைப்பார் நள்ளிருள் போதின்கண் வந்து சால்வராகலின் அதனைக் கேட்டுச் செல்வான் “விடிவளவில் சென்று” என்றானுமாம். ஒற்றார் நள்ளிருளில் வந்து கூறுதலை, “நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற

சிலையும் செருமுனையுள் வைகி - இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து நள்ளிருட்கண் வந்தார் நமர்”

என்பதனால் அறிக.

12. வஞ்சினம் - 2

- பு. வெ. 6

6

(16)

நேரிசை ஆசிரியப்பா

17. கலிமா னோயே! கலிமா னோயே! நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக் காய்சின யானைக் கலிமா னோயே!