பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

20.

இளங்குமரனார் தமிழ்வளம்

3

12

13. படைச் செருக்கு - 3 பலவிகற்பப் பஃறொடை வெண்பா

நகையுள்ளும் நல்லவை எய்தார் ; பகைநலிய (ஞாட்புள்ளும் நல்லவை எய்தார்; விழைவொடு) வேற்றுக் களத்தில் *ஒருவர் தமராகச்

'சென்றார் ஒருவர்மேற் (செம்மாந் தடர்த்தாற்றிப்) புண்ணும் படுக்கலார்; தாம்படார்; போந்தாரக் கண்ணும் படுங்கொல் கவன்று.

புறத். 1316

இ-ள்) மகிழ்ந்து பாராட் டெடுக்கும் இடத்தும் நற்புகழைப் பெறார்; பகையை அழித்தமையால் போர்க்களத்திலும் நற்பேறு பெறார்; விருப்புடன் வேறொருவர்க்கமைந்த போர்க்களத்தில் ஒருவர்க்குத் துப்பாகச் சென்றால் ஒப்பற்ற வீரர்மேல் தலைமை தோன்றத் தாக்கி விழுப்புண் படுத்தார்; தாமும் விழுப்புண்பட்டு மாயார்; இந்நிலையில் களத்தில் இருந்து மீண்டார் கவலையால் தம் கண்ணையும் மூடி உறங்குவரோ என்றவாறு.

-

-து :- “போர்க்குறிக் காயமே புகழின் காயம்” என்பது. காயம் முன்னது புண்ணும், பின்னது உடலுமாம்.

(வி. ரை) எய்தாராய், எய்தாராய், படுக்கலாராய், படாராய் போந்தார் கண்ணும் படுங்கொல் எனத் தொடுப்பினும் ஆம்.

நகை

மகிழ்ச்சி. இவண் மகிழ்ந்து பாராட்டுதலைக் குறித்தது. இனி ‘நகை' என்பது மற்போர் முதலிய ஆடல் நிகழும் களங்களுமாம்.

"மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்டக் கோனை யானுமோர் ஆடுகள மகளே; என் கைக் கோடீர் இலங்குவளை நெகிழ்ந்த

பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே’

என்பது குறுந்தொகை (31). இதனால் ஆடுகளத்தில் ஆடவர் எய்தும் பெருமை குறித்தமை அறிக.

பாடம்: *. ஓருவர்த மாறாகச். 1. சென்றால்.