பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின்’”

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

121

(484)

என்பது வள்ளுவம்.

(22)

6

23.

13 . படைச் செருக்கு - 6

நேரிசை வெண்பா

பரவைவேல் தானைப் பகலஞ்சு வேனா இரவே எறியென்றாய் என்னை - விரைவிரைந்து வேந்தனீ ஆயினாய் அன்றிப் புகுவதோ போந்தென்னைச் சொல்லிய நா.

கட்டளை

புறத். 1319

(இ-ள்) கடல்போல் விரிந்த வேற்படையைக் கண்டு பகற்பொழுதில் அழித்தற்கு அஞ்சுவேனாகக் கருதி இரவுப் பொழுதில் மிக விரைந்துபோய் அழிக்க என்று எனக்குக் ளை ட்டனை; இவ்வாறு கட்டளை இட்ட வேந்தன் ஆயினை; அல்லையேல் இவ்வாறு கட்டளை இட்ட நின் நா, வாயின் உள்ளே புகுந்திருக்கவும் கூடுமோ? அறுத்திருப்பேன் என்றவாறு.

இ-து:- பகைவர் அறியாமல் இரவில்போய் அவரை அழித்துவருவது வீரர்க்கு இழிவு என்பது.

(வி-ரை) வேந்தன் என்றது இவண் படைத் தலைவனை என்க. படைத்தலைவன் தன் படைவீரன் ஒருவனை நோக்கி, இரவில் போய்ப் பகைவரை அழித்து வருக” என்று ஏவினான். அவ்வேவுதல் கேட்ட அளவில் தன் ஆண்மைக்கோர் அசைவு நேரிட்டதாக எண்ணிய வீரன் வெகுண்டுரைத்த செருக்குரை து. இதனால் அவன்றன் ‘மறமாண்பு’ நன்கு போதரும்.

வேற்படையை முன்னே வெள்ளம் (23) என்றார்; இவண் 'பரவை' என்றார். பரவை - கடல். கட்பார்வையைக் கடந்து பரந்துகிடப்பது ஆகலின் ‘பரவை’ காரணப்பொருட்டு. ‘கடல்’ என்பதும் அது. நோக்கைக் கடந்தது என்பது.

“பகலஞ்சுவேனா?" என்றது, வெளிப்படச் சென்று வீரம் விளைத்தற்கு மாட்டேன் என்னும் நினைவோ? யான் அஞ்சுவேன் என்பதை யாங்ஙனம் உணர்ந்தனை? அஞ்சியதற்குச் சான்றும் உண்டுகொல்? என்று உருத்து நின்று வினாவிய வினாவிது.